புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
ஆனைமலை
ஆனைமலை அடுத்த பெரிய போது அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் டாக்டர் ரம்யா கலந்துகொண்டு புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்