போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகை குறித்து விழிப்புணர்வு

போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-11-01 19:19 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், 4 ரோடு மற்றும் பிரதான சாலைகளில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகை குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகிராபானு தலைமையிலான போலீசார், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் மற்றும் பாதுகாப்பான சாலை பயணம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் அபராதத்தை தவிர்க்க சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதிவேகம் மற்றும் அஜாக்கிரதை பயணத்தை தவிர்த்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு உயிர்களை காப்போம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இலகுரக, கனரக வாகன ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்