மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு

மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-11-16 18:45 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் அசோகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி பள்ளி சிறப்பு ஆசிரியர் சித்ரா வரவேற்று பேசினார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், பள்ளியில் சேர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் இயன்முறை மருத்துவர் வினோத்கண்ணா, பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர் சோபியா நன்றி தெரிவித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்