போதை மருந்துகளின் தீய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு
போதை மருந்துகளின் தீய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நடந்தது.
கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் அகில உலக போதை மருந்துகளின் தீய பயன்பாடு எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதை மருந்துகளின் தீய பயன்பாடு தொடர்பாக கரூர் பஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) அலுவலகத்தின் சார்பில் கோட்ட கலால் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.