சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-07-13 19:45 GMT

கோவையில் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை உள்ளதாக கூறி இளைஞர்களை குறி வைத்து பண மோசடி நடக்கிறது.

இதுதவிர சமூகவலைத்தளத்தில் உரையாடும் பெண்களின் புகைப்படங்களை சிலர் மார்பிங் செய்து, மிரட்டும் சம்பவங்களும் நடைபெறுகிறது.

எனவே சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.


அதில் ஆன்லைன் மூலம் பண மோசடி நடைபெற்றால் உடனே 1930 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து தகவல் தெரி விக்க வேண்டும்.

இதன்மூலம் இழந்த பணத்தை திரும்ப பெறலாம். அதிக வட்டி தருவதாக ஆன்லைன் மூலம் ஆசைகாட்டி ஏமாற்றும் நபர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப கூடாது. குழந்தைகளின் கையில் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இலவச வைபை பயன்படுத்தினால் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்களது சுயவிவரம் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.


மேலும் செய்திகள்