கொரோனா குறித்து விழிப்புணர்வு
கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கீழப்பழூவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் பழைய பஸ் நிலையம் அருகே கொரோனா மற்றும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதாரத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மருதமுத்து தொடங்கி வைத்தார். இதில் கலைக்குழுவினர் நடனமாடி, கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல்கள் பாடி, நாடகங்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் கீர்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.