நெலாக்கோட்டை அரசு பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு
நெலாக்கோட்டை அரசு பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு
பந்தலூர்
பந்தலூர்அருகே நெலாகோட்டை அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பள்ளி நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். தெய்வலட்சுமி பினு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையசெயலாளர் சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-இளவயது காதல் என்பது கானல்நிர் போன்றது. பல பெண்கள் புரியாத இளவயது காதலால் படிப்பையும் வாழ்க்கையும் இழந்து விட்டார்கள். தற்போதைய சூழலில் மாணவ பருவத்தில் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றார். மாவட்ட ஒருங்கிணைப்பளர்கள் அஜித், ரவீந்திரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.