தீயணைப்புத்துறை சார்பில் கோத்தகிரியில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு

தீயணைப்புத்துறை சார்பில் கோத்தகிரியில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு

Update: 2022-10-23 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் கோத்தகிரியில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி பிரச்சாரங்கள் செய்தும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், விபத்து இல்லாமல் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி வனத்தின் கரையோரம் உள்ள நாயக்கன்பாடி ஆதிவாசி கிராமத்தில் நகைச்சுவையாளர் மன்றம் சார்பில் தீபாவளி கொண்டாடப்பட்டது. கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமை தாங்கி பேசினார். இதில் நகைச்சுவையாளர் மன்ற தலைவரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான ஜான் மனோகர் ராஜ், செயலாளர் அருண்குமார், பொருளாளர் மணிகண்டன், ஓவேலி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு காவல் பிரிவு தலைமை காவலர் மோகன்தாஸ், தலைமை காவலர் கஜேந்திரன் மற்றும் ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர். தீபாவளிக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் இனிப்பு, காரம் வழங்கி அவர்களோடு பட்டாசு வெடித்தும் மத்தாப்புகள் கொளுத்தியும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்