தர்மபுரி:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தர்மபுரி நகராட்சியின் சார்பில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் லாவண்யா, நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சுசீந்திரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தங்கதுரை மற்றும் நகராட்சி ஊழியர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் அனைத்து கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்குள்ள கடைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு பகுதிகளில் உள்ள நோயாளிகள், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் தடை குறித்தும், மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.