நாமக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்குபோக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2023-06-15 18:45 GMT

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு தன்ராசு ஆகியோர் உத்தரவின்பேரில் நாமக்கல் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமை தாங்கினார். இதில் 18 வயது பூர்த்தியாகும் முன்பு இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனங்களில் 3 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக பள்ளி மாணவர்களை அழைத்து வந்த பெற்றோருக்கும் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தினர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்