தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்

ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

Update: 2023-03-26 18:45 GMT

ராசிபுரம்

ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சார்பில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு, தீ பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் குறுக்கபுரத்தில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி பலகார ராமசாமி தலைமை தாங்கினார். தீயில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது? தீ விபத்தில் உடைமைகளையும் உயிர்களையும் எவ்வாறு மீட்பது? போன்ற செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்