பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-10-23 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தீயணைப்பு நிலையம் சார்பில் நிலையை அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் அடிப்படையில் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் பாதுகாப்பான முறையில் எவ்வாறு தீபாவளி கொண்டாடுவது, பட்டாசு எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் திருவாடானை, சி.கே.மங்கலம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சந்தை பகுதியிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது மற்றும் பாதுகாப்பான முறையில் பட்டாசு எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதேபோல் ஓரியூர் நான்கு முனை சந்திப்பு சி.கே. மங்கலம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியிலும் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்