காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

Update: 2023-09-17 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரி நுழைவுவாயில் முன்பு பசுமை தாயகம் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி மாவட்ட பசுமை தாயகம் தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அல்லிமுத்து முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பசுமை தாயகம் அமைப்பினர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன், பன்னீர்செல்வம், தர்மபுரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்