அரசு பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா
கச்சிராயப்பாளையம் அரசு பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா
கச்சிராயப்பாளையம்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் விருதுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ஜெயவேல், தலைமை ஆசிரியை ராணி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதில் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னசாமி, உறுப்பினர்கள் குமரன், சம்பத், சண்முகம், சேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மகேந்திரன், ராமூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.