வத்தலக்குண்டுவில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு விருது

வத்தலக்குண்டுவில் நாடார் உறவின்முறை சார்பில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2023-07-16 21:00 GMT

வத்தலக்குண்டு நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வியில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதற்கு தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் மணி, துணைத்தலைவர் சிவனேச பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் வாழ்த்தி பேசினார். அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த கச்சுந்திரா ஷெர்லின் உள்பட மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கினார். காமராஜரை பற்றி சிறப்பாக பேசிய மாணவி யுவனாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முன்னாள் கல்வி அதிகாரி நாகராஜன் காமராஜரை பற்றி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பேரூராட்சி துணைத்தலைவர் தர்மலிங்கம், நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மதியழகன், மாடசாமி, அனந்தப்பன், கருப்பையா, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் மோகன் தொகுத்து வழங்கினார். முடிவில் முன்னாள் ஆசிரியர் திருமேனி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்