தாய்லாந்தில் விருது: அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து
தாய்லாந்தில் பெற்ற விருதை திருநங்கை நமீதா மாரிமுத்து அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
திருநங்கைகளுக்கான மிஸ் பன்னாட்டு அரசி 2022 போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நமீதா மாரிமுத்து கலந்து கொண்டு, முதல் 10 இடத்தில் இடம் பெற்று, மிஸ் பாப்புலர் வோட் ஆப் வேர்ல்டு விருதை பெற்றார்.
திருநங்கை நமீதா மாரிமுத்து மிஸ் பாப்புலர் வோட் ஆப் வேர்ல்டு விருதிற்காக பெற்ற தங்க கோப்பையினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.