கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது

கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமைச்சர் காந்தி விருது வழங்கினார்.

Update: 2022-12-12 17:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலை துறையில் சாதனை படைத்த 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு விருது வழங்கி பாராட்டினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் ஹேமநாதன், கல்லூரி முதல்வர் பூங்குழலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்