பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கீழக்கரை முத்தரையர் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

Update: 2023-06-26 18:42 GMT

கீழக்கரை, 

கீழக்கரை தாலுகா முத்தரையர் சங்கம் சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின் 1348-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கீழக்கரை இடிந்த கல்புதூரில் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கீழக்கரை தாலுகா முத்தரையர் சங்க தலைவர் நண்டு முனியசாமி, துணைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் முருகானந்தம், துணைச்செயலாளர் செல்லையா, கல்வி குழு தலைவர் முத்துராமன், ராமநாதபுரம் மாவட்ட முத்தரையர் சங்க செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை தாலுகா முத்தரையர் சங்க செயலாளர் எம்.பாலமுருகன் வரவேற்றார். துணைத் தலைவர் முனியசாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கண்ணன் மற்றும் குப்பச்சி வலசை பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.முடிவில் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்