ஏ.வி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை

சங்கரன்கோவில் ஏ.வி.கே. பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை

Update: 2022-07-27 14:24 GMT

வாசுதேவநல்லூர்:

சங்கரன்கோவில் ஏ.வெங்கடேஷ் அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் ஏ.வி.கே. பள்ளி கல்வி குழும வளாகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் சார்பாக பள்ளியின் முதல்வர் சுப்பிரமணியன் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவ- மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்