அவினாசியில் செயல்படாத தானியங்கி சிக்னல்

Update: 2022-07-03 16:45 GMT


அவினாசியில் செயல்படாத தானியங்கி சிக்னலால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே தானியங்கி சிக்னலை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து சிக்னல்

கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவினாசி நகரம் அமைந்துள்ளது. அவினாசியிலிருந்து சென்னை, சேலம், கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் புளியம்பட்டி, தண்டுக்காரம்பாளையம், சேவூர், கருவலூர் நம்பியாம்பாளையம், ஆட்டையாம்பாளையம், தெக்கலூர் உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஏற்றிகொண்டு வாகனங்கள் அவினாசி மெயின்ரோடு வழியாக சென்று வருகின்றன.

அவினாசியில் போலீஸ் நிலையம், அரசுப்பள்ளிகள், பிரசித்தி பெற்ற அவினாசிலிங்கேசுவரர் கோவில், பெருமாள் கோவில் பத்திரப்பதிவு அலுவலகம், தபால்நிலையம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளது. மற்றும் ஜவுளி கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளது. போலீஸ் நிலையத்திலிருந்து மெயின் ரோட்டில் 300 மீட்டர் தூரத்தில் மங்கலம் ரோடு பிரிவு, கோபிரோடு பிரிவு, மேற்குரத வீதி பிரிவு ரோடுகள் அடுத்தடுத்து உள்ளது. இதனால் அவினாசியில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. அதிலும் அனைத்து வாகனங்களும் அசுரவேகத்தில் வருவதால் ரோட்டில் நடந்து செல்லவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

அவினாசியில் செயல்படாத தானியங்கி சிக்னல் 

அவினாசி மெயின்ரோடு நால்ரோடு சந்திப்பு மற்றும் ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல் பழுதடைந்து பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. அவினாசியின் முக்கிய சந்திப்பு ரோடுகளான அவினாசி போலீஸ் நிலையம் அருகில், ஆட்டையாம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் பயனற்ற நிலையில் உள்ள சிக்னலை பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்