ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் அமோக விற்பனை

ஏழை, எளிய பொதுமக்களுக்கு தமிழக அரசு நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் ஆகிய உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது.

Update: 2023-06-27 16:06 GMT

ஏழை, எளிய பொதுமக்களுக்கு தமிழக அரசு நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் ஆகிய உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் உணவு பொருட்கள் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை-எளிய குடும்பத்தினருக்காக ரேஷன் கடையில் மலிவான விலைக்கு உணவு பொருட்கள் வினியோகம் செய்கிறது. ஆனால் ரேஷன் கடைகளில் உணவு பொருள் வாங்க சென்றால் அரிசி இருப்பு இல்லை, பாமாயில் தீர்ந்துவிட்டது, பருப்பு வரவில்லை என்று எங்களை அலைக்கழிக்கின்றனர். உணவு பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை. அதே சமயம் இடைத்தரகர்கள் மூலம் ரேஷன் அரிசியை கிலோ ரூ.20, ரூ.25-க்கு மூட்டை மூட்டையாக அரிசி ஆலைகளுக்கும், இட்லிமாவு அரைக்கும் ஆலைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பாமாயில், பருப்பு ஆகியவற்றை ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், சில்லி சிக்கன் கடைகளுக்கு விற்கப்படுகிறது. அரசு சலுகை விலையில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் உணவு பொருட்களை வெளி மார்க்கெட்டில் விற்று இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். ஏழை, எளிய பொதுமக்களுக்கு நாமம் சாத்தப்படுகிறது. இதுபற்றி உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்