அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தேர் திருவிழா
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் காசிக்கு நிகரான கோவில் என்ற என்ற சிறப்பையும் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டு அதற்கு மாவிலை, தோரணங்கள் கட்டி கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நேற்று காலை 6 மணி அளவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து கருணாம்பிகை அம்மன்,அவினாசியப்பர் பக்தர்களுக்அவினாசிலிங்கேஸ்வரர் கோவில்
தேர்த்திருவிழா கொடியேற்றம்கு அருள்பாலித்தனர்.
சூரிய,சந்திர மண்டல காட்சிகள்
இன்று (புதன்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகளும், நாளை (வியாழக்கிழமை) கிளி, பூத, அன்ன வாகன காட்சிகளும் நடக்கிறது.
28-ந்தேதி கைலாச வாகன புறப்பாடு, புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ந் தேதி இரவு 10 மணிக்கு 63 நாயன்மார்கள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 30-ந்தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன உலா நடைபெறுகிறது.
மே 1-ந்தேதி காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற மே 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
பின்னர் 3-ந்தேதி திருத்தேர் இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும். 4-ந்தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 5-ந்தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும், 6-ந்தேதி இரவு தெப்பத்தேர் விழாவும் நடக்கிறது. 8-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.