சிவசுப்பிரமணியர் கோவிலில் ஆவணி மாத திருவிழா
தேசூர் பேரூராட்சியில் உள்ள சிவசுப்பிரமணியர் கோவிலில் ஆவணி மாத திருவிழா நடந்தது.
சேத்துப்பட்டு
தேசூர் பேரூராட்சி அய்யாசாமி தெருவில் உள்ள சிவசுப்பிரமணியர் கோவிலில் ஆவணி மாத திருவிழா நடந்தது.
இதனை முன்னிட்டு காலையில் வள்ளி தெய்வானை சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
மகாதீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் தேசூர் ஏரிக்கரை முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிவசுப்பிரமணியர் கோவிலுக்கு வந்து வணங்கிச்சென்றனர்.
கோவில் சார்பாக திருநீறு, குங்குமம், புஷ்பம் வழங்கப்பட்டது. நித்திய சொற்பொழிவாளர் வெற்றிவேல் பக்தி பாடல் பாடினார்.
கோவில் அர்ச்சகர் தரணி வேந்தன், தேசூர் போலீஸ் ஏட்டு பாரதி, உபயதாரர் கே.பிரதாப், பி.சரண்யா மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.