விவசாய பயன்பாட்டுக்கு தேவையான உரம் இருப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு தேவையான உரம் இருப்பில் உள்ளதாக வேளாண் இணை இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-14 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முடிய நெல் 1,02,643 எக்டர், சிறுதானியங்கள் 11,005 எக்டர், பயறுவகை 40,750 எக்டர், மணிலா 31,342 எக்டர், கரும்பு 15,383 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத உரத்தேவையான 4,910 மெட்ரிக் டன்னுக்கு 20,112 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்து இதுநாள் வரை ஸ்பிக் நிறுவனத்தின் 262 மெ.டன் யூரியாவும், 188 மெ.டன் டி.ஏ.பி. உரமும், 756 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரமும், ராமகுண்டம் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்திலிருந்து 2,611 மெ.டன் யூரியாவும், மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்திலிருந்து 1,456 மெ.டன் யூரியாவும் முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலம் வரப்பெற்றுள்ளது.

இந்த உர மூட்டைகள், முண்டியம்பாக்கத்தில் இருந்து லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 1,228 மெ.டன்னும், டி.ஏ.பி. 513 மெ.டன்னும், பொட்டாஷ் 206 மெ.டன்னும், கூட்டுரம் 1,018 மெ.டன்னும் இருப்பு உள்ளது. தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் 4,380 மெ.டன் யூரியாவும், 1,548 மெ.டன் டி.ஏ.பி.யும், 435 மெ.டன் பொட்டாஷ் உரமும், 4,077 மெ.டன் கூட்டுரமும், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 1,144 மெ.டன்னும் இருப்பு உள்ளது.

விவசாயிகள் பயன்பெறலாம்

உரம் வாங்குவதற்கு கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களை அணுகும் விவசாயிகள், தவறாமல் தங்களின் ஆதார் எண்ணை கொண்டு சாகுபடிக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொண்டு பிஓஎஸ் கருவி மூலம் உரிய ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேற்கண்ட உரங்களை கொண்டு விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்கள், கரும்பு மற்றும் இதர பயிர்களுக்கு தேவையான அளவு மட்டும் உரங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்