துணிப்பை வழங்கும் தானியங்கி எந்திரம்

மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் துணிப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-05 16:28 GMT

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாடு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் திட்டத்தின் மூலம் துணிப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி துணிப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், 'இந்த எந்திரம் ரூ.10 நாணயம் மற்றும் ரூ.20, 50, 100 நோட்டுகளை செலுத்தி துணிப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தானியங்கி துணிப்பை வழங்கும் எந்திரம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும்' என்றார்.

பின்னர் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுற்றுசூழல் மேம்பாட்டிற்கு மகத்தான பங்களிப்பை அளித்து மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.அண்ணதாசன் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனமான இளம்தளிர் பசுமை இயக்கத்திற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் வழங்கும் பசுமை முதன்மையாளர் விருது தலா ரூ.1 லட்சம் காசோலையுடன் கூடிய பாராட்டு சான்றிதழினையும் கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப்சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்