முஸ்லிம் பெண்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி

திண்டுக்கல்லில், முதன் முறையாக முஸ்லிம் பெண்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-28 16:35 GMT

முஸ்லிம் பெண்களுக்கான சுயவர நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. வரதட்சணை பிரச்சினையால் திருமணம் ஆகாமல் தவிக்கும் முஸ்லிம் பெண்களுக்காக இந்த சுயம்வர நிகழ்ச்சி இலவசமாக நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல், மதுரை, சென்னை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 பேர் பங்கேற்றனர். இதில் 200 பேருக்கு திருமணம் செய்ய இருதரப்பு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சுயம்வர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாரூக் கூறுகையில், சேவை மனப்பான்மையுடன் முஸ்லிம் பெண்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சுயம்வர நிகழ்ச்சி மூலம் இதுவரை 14 மாவட்டங்களில் 9 ஆயிரம் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது திண்டுக்கல்லில் முதல்-முறையாக முஸ்லிம் பெண்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வமாக பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்