ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-09 19:46 GMT

பெரம்பலூரில் ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில், காந்தி சிலை முன்பு நேற்று நடந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியாயமான மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தும் முடிவை கைவிட வேண்டும். ஆன்லைன் முறையில் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட வாகன காப்பீடு கட்டணம், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். பெரம்பலூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி தொடர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் சிலை அருகில் இருந்த கழிவறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அகஸ்டின், பொருளாளர் ரெங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்