ஆட்டோ கவிழ்ந்து இளம்பெண் சாவு

தேவர்குளம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-15 18:45 GMT

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே உள்ள பன்னீரூத்து ஊரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (வயது 55). இவரது மகள் செல்வி (25). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது ஆறுமுகம் வெளியூரில் இருந்து வருகிறார். இந்த நிலையில், முத்துக்காளை, செல்வி ஆகிய இருவரும் பன்னிரூத்தில் இருந்து ஆட்டோவில் இரண்டும்சொல்லான் வழியாக அழகியபாண்டியபுரத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

பன்னீரூத்து விலக்கின் அருகே சென்றபோது ரோட்டில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த முத்துக்காளை, ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியன் ஆகியோர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்