ஆட்டோ கவிழ்ந்து அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-06-28 19:48 GMT

ஆட்டோ கவிழ்ந்து அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் காயம்திருச்சி ஸ்ரீரங்கம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கல்வராயன் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை அதே பகுதியை சேர்ந்த கோகுல் (18) மற்றும் பாண்டியன் என்பவரின் மகன்கள் சுரேஷ்குமார் (22), ஹரீஸ்குமார் (19) ஆகியோரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அம்மாமண்டபத்தில் இருந்து மாம்பழச்சாலையில் ஆட்டோ வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் கல்வராயன், கோகுல், சுரேஷ்குமார், ஹரீஸ்குமார் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்