ஆட்டோ கண்ணாடி உடைப்பு; 3 பேர் கைது
கோவையில் ஆட்டோ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்னர்.
கோவை உக்கடம் ராமர் கோவில் வீதியில் உள்ள குப்பண்ண நாயக்கர் வீதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 45). இவர்கள் ஆட்டோவில் வைத்து வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று ஆட்டோவை குப்பண்ணநாயக்கர் தெருவில் நிறுத்தி இருந்தார்கள். அப்போது இங்கு நிறுத்தக்கூடாது என்று 3 பேர் தகராறு செய்தார்கள். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட ராமலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பெரிய கடைவீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ கண்ணாடியை உடைத்த பட்டக்காரர் அய்யாசாமி கோவில் வீதியைச் சேர்ந்த நிஜாம் (வயது 30), கெம்பட்டிகாலனியை சேர்ந்த நந்தகுமார் (26), காளிதாஸ் (32) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.