ஆட்டோ டிரைவர் தற்கொலை

மானூரில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-07 19:28 GMT

மானூர்:

மானூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் குட்டி துரை (வயது 48). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு மணியம்மாள் (43) என்ற மனைவியும், ஜோசப் (20) என்ற மகனும், அனிஷா (17) என்ற மகளும் உள்ளனர். குட்டி துரை நீண்ட நாட்களாக மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூலி வேலைக்கு சென்றிருந்த மணியம்மாள் வீட்டிற்கு வந்தபோது, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். குட்டி துரையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்