மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் சாவு

Update: 2022-12-09 18:45 GMT


கோவை மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் வில்லியம்(வயது 63). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் நரசிம்மநாயக்கன்பாளையம் வந்தார். பின்னர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் மில் அருகே ஒரு புறத்தில் இருந்து மறு புறம் கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென வில்லியம் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த யுவராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

------------------

Tags:    

மேலும் செய்திகள்