ஆற்றில் பிணமாக கிடந்த ஆட்டோ டிரைவர்

வேளாங்கண்ணியில் ஆற்றில் ஆட்டோ டிரைவர் பிணமாக கிடந்தார்.

Update: 2022-11-17 18:45 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அண்ணா பிள்ளை தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது35). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அவரை மனைவி நிஷா பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இந்த நிலையில் நேற்று வேளாங்கண்ணியில் இருந்து கிராமத்து மேடு செல்லும் சாலையில் உள்ள மரவனாற்றில் விேனாத்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நிஷா கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்