அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஆட்டோ டிரைவர் சாவு
அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
தூசி
அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
வெம்பாக்கம் தாலுகா வடமாவந்தல் கிராமம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர் மதுவுக்கு அடிமையாகியிருந்தார்.
கடந்த ஒரு வார காலமாக ஆட்டோ ஓட்டாமல், தொடர்ந்து மதுக்குடித்து வந்த நிலையில் வீ்ட்டில் மயக்க நிலையில் இருந்து உள்ளார்.
அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மயக்க நிலையில் இருந்து வந்த சுரேஷை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது ஆட்டோ டிரைவர் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து சுரேஷின் மனைவி காமாட்சி தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.