ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-14 19:15 GMT

திருச்சி,ஜூன்.15-

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்டோ டிரைவர்

திருச்சி வரகனேரி பிச்சை நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். (வயது 33). ஆட்டோ டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று லோகநாதன் குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார்.

இதனால் அவரது மனைவி சத்தியா கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனவேதனை அடைந்த லோகநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்