விஷம் தின்று ஆட்டோ டிரைவர் தற்கொலை

விஷம் தின்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-27 19:22 GMT

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவருக்கு மஞ்சள் காமாமையால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சக்திவேல் தனது தோட்டத்தில் விஷத்தை தின்று (எலி பேஸ்டு) மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சக்திவேல் மனைவி கோகிலா கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்