காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-03 18:45 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முனிவேல் (வயது 22), ஆட்டோ டிரைவர். இவர் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர், தக்காளி தோட்டத்திற்கு அடிக்கும் விஷத்தை குடித்து மயக்கம் அடைந்தார். இதையறிந்த குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்