ஆசை வார்த்தை கூறிபள்ளி மாணவியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது
ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கொண்டலாம்பட்டி,
சேலம் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (வயது 21). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் அங்குள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆசைவார்த்தை கூறி சமயபுரத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். மேலும், பள்ளிக்கு சென்ற மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் மல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மற்றும் சூரியமூர்த்தியை தேடிவந்தனர். இந்நிலையில், குழந்தை திருமணம், மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக ஆட்டோ டிரைவர் சூரியமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.