நண்பரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

மதுகுடிக்க வர மறுத்த நண்பரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

Update: 2022-11-10 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 41), ஆட்டோ டிரைவர். இவரும் விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடு பகுதியை சேர்ந்த சோமஸ்(47) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் சவிதா தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சம்பவத்தன்று சோமஸ், குடிபோதையில் இளையராஜாவை மது குடிக்க அழைத்துள்ளார். அதற்கு அவர், தன்னை நாய் கடித்துவிட்டது என்றும் இதனால் மது குடிக்க வரவில்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சோமஸ், இளையராஜாவை திட்டி செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்