ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

அஞ்செட்டி அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-20 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆட்டோ டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் முரளி (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் தனது நிலத்தில் துவரை சாகுபடி செய்திருந்தார். நேற்று மாலை வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த மாட்டை பிடித்து வர முரளி சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் முரளியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். முரளியின் அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்த மகள் கார்த்திகா (11) அங்கு ஓடி வந்தாள். அதற்குள் முரளி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சொத்து பிரச்சினை

இந்த கொலை குறித்து அந்த பகுதி பொதுமக்கள் அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முரளிக்கு சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சொத்து பிரச்சினைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஞ்செட்டி அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்