மணலூர்பேட்டை அருகே டிராக்டர் மீது ஆட்டோ மோதல்; 4 பேர் காயம்
மணலூர்பேட்டை அருகே டிராக்டர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே தேவரடியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி முனியம்மாள் (வயது 65). இவரும், அதே பகுதியை சேர்ந்த அலமேலு (58), அங்கம்மாள், கண்ணன் ஆகியோரும் மணலூர்பேட்டையில் இருந்து தேவரடியார்குப்பத்திற்கு ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை சித்தப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த காசிவேல் (49) என்பவர் ஓட்டினார். செல்லங்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த முனியம்மாள் உள்ளிட்ட 4 பேரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.