நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளியில் இருந்து தண்டுக்காரன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை 3 பயணிகளை ஏற்றி கொண்டு ஆட்டோ ஒன்று புறப்பட்டது. இந்த ஆட்டோவை தண்டுக்காரன்பட்டியை சேர்ந்த செல்வம் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். மேட்டுக்கொட்டாய் பகுதியில் வளைவில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் செல்வம், தண்டுக்காரன்பட்டியை சேர்ந்த மாதேஷ் (61), குணசேகரன் (60), முருகன் (40) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.