திருமணமான 14 வயது சிறுமியை அதிகாரிகள் மீட்டனர்

திருமணமான 14 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

Update: 2022-11-25 17:57 GMT

ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கும், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்து, சென்னையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திருமணமான இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈச்சம்பட்டு கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சமூக நலத்துறை அலுவலர் ராஜகுமாரி மற்றும் உமராபாத் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்