சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் அருகே சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

Update: 2022-06-13 17:58 GMT

திட்டச்சேரி:

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் பொறக்குடியிலிருந்து பரமநல்லூர், மேனாங்குடி வரையிலான 2,650 மீட்டர் தூரம் உள்ள சாலை, பிரதம மந்திரி கிராம சாலைகள் 2020-21 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.இந்த பணியை திருமருகல் ஒன்றிய பொறியாளர்கள் கவிதாராணி, செந்தில் ஆகியோர் பார்வையிட்டு சாலையின் அகலம் மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.பின்னர் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது சாலை ஆய்வாளர் விமலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்