மழைநீர் தேங்கும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

வேலூரில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-06-24 11:12 GMT

வேலூர் மாநகர பகுதியில் மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது. குறிப்பாக இந்திராநகர், திடீர்நகர், சதுப்பேரி ஏரி கால்வாய் பகுதியில் உள்ள குடியிருப்புகள் தண்ணீர் சூழ்ந்து காணப்படும். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் மாநகரப் பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

மழைநீர் தேங்கும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள இந்திராநகர், திடீர் நகர், நிக்கல்சன் கால்வாய், சதுப்பேரி ஏரி கால்வாய் பகுதிகளில் உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் தேங்கக் கூடிய பகுதிகளில் உள்ள மழைநீர்வரத்து கால்வாய்களை சீரமைக்கவும், நிக்கல்சன் கால்வாயில் அடைப்புகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் மழைநீர் தேங்கக் கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு கால்வாய்கள் தூர்வாரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்