தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்டு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை

பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்டு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-07-26 09:51 GMT

தூத்துக்குடி,

உலகப் பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கும். இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்

அந்த வகையில், உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் நீல நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், பனிமயமாதா பேராலயத்தின் தேரோட்டத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்