கோத்தகிரியில் நெடுஞ்சாலைப்பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு

கோத்தகிரியில் நெடுஞ்சாலைப்பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு

Update: 2023-05-12 18:45 GMT

கோத்தகிரி

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவின்படி உள் தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய கோவை நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், உதவி கோட்டப் பொறியாளர் உமா சுந்தரி, உதவி பொறியாளர்கள் விக்னேஷ்ராம் மற்றும் ஶ்ரீபிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கோத்தகிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட கோடநாடு காட்சிமுனை செல்லும் சாலையில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளை இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சாலையின் தரம் மற்றும் அளவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், கோத்தகிரி உதவிக் கோட்ட பொறியாளர் மூர்த்தி, உதவிப் பொறியாளர் ரமேஷ், தரக் கட்டுப்பாடு இளநிலை பொறியாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்