மாணவர்களைக் கவரும் எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கல்வித்துறையில் 27 ஆண்டுகள் தரமான சிறந்த கல்வி அனுபவம் பெற்று 12 இளநிலைப் பட்டப் படிப்புகளையும் மூன்று முதுநிலை படிப்புகளையும் வழங்கும் கல்வி நிறுவனமாக மாண்புடன் திகழ்கிறது.

Update: 2023-04-11 05:24 GMT

சென்னை திருவேற்காடு வீரராகவபுரத்தில் அமைந்திருக்கும் S.A. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அதிநவீன வசதிகளுடன் சிறப்பான வழிகாட்டுதலோடு நன்மைகள் பல நிறைந்த இனிமையான கல்விச் சூழலை மாணவர்களுக்கு வழங்குகிறது. மாணவர்களைக் கவரும் வண்ணம் நாள்தோறும் பல்வேறு செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு பீடு நடை போடுகிறது.

கல்வித்துறையில் 27 ஆண்டுகள் தரமான சிறந்த கல்வி அனுபவம் பெற்று 12 இளநிலைப் பட்டப் படிப்புகளையும் மூன்று முதுநிலை படிப்புகளையும் வழங்கும் கல்வி நிறுவனமாக மாண்புடன் திகழ்கிறது.

இவ்வாண்டு நிகழ்ந்த கல்லூரி விழாக்கள்:

  • காட்சித் தொடர்பியல் மாணவர்களை உலகத் தரத்தில் உயர்த்துவதற்காக இயக்குநர்கள் வாரம்(Directors cut 2.0) நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு, தமிழ்த் திரை உலகில் சாதித்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். 23ஆம் புலிகேசி இயக்குநர் திரு.சிம்புதேவன். இயக்குநர் திரு.ராசி அழகப்பன். திருமணம் எனும் நிக்கா இயக்குநர் திரு அனீஸ். இளம் இயக்குநர் திரு.சதீஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களையும் திரைப்படத்தில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்களையும் தெளிவாகக் கூறிப் பயிற்சி அளித்தனர்.
  • தமிழக பாரா ஒலிம்பிக் அமைப்போடு இணைந்து எம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற T20 கிரிக்கெட் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
  • நாட்டு நலப் பணித்திட்டம் சார்பாக உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
  • உலக மகளிர் தினத்தை ஒட்டி சாதித்த மகளிருக்கு மகளிர் தின விழாக் கொண்டாட்டத்தில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் எஸ்..சந்திரசேகர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழும் விருதுகளும் வழங்கப்பட்டன.
  • கல்லூரி விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் நடிகருமான திரு தம்பி ராமையா. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
  • சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பொற்கிழிப்பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வி. ஜி. சந்தோஷம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
  • மாணவர்களின் தகவல் பரிமாற்றுத் திறனை வளர்ப்பதற்காகப் பல்வேறு வழிகாட்டு நூல்களுடன் உலகத் தரத்தில் டிஜிட்டல் நூலகம் கல்லூரியில் இயங்கி வருகின்றது.
  • CMA அமைப்போடு இணைந்து ஜிஎஸ்டி(GST) மற்றும் IT E.Filing சான்றிதழ் படிப்புகளுக்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • கல்வியோடு மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதற்காக முழு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • நடிப்புக்கொட்டகை அமைப்போடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங்(Diploma in film Making) படிப்பும் கற்பிக்கப்படுகிறது.

நூல் வங்கித் திட்டம்:

  • பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கின்ற மாணவர்களின் செலவுச் சுமையைக் குறைப்பதற்காக நூலக வங்கித் திட்டம் எனும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுப்பட்டுள்ளது.
  • பட்டப் படிப்பிற்கான அனைத்து நூல்களையும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் கல்லூரியிலேயே பெற்றுத் தேர்வுகளை எதிர்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பணி வாய்ப்பு நேர்காணல்:

கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் இறுதி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த வளாக நேர்காணலைக் கலை அறிவியல் கல்லூரியிலும் நடத்தி மாணவர்களுக்குத் தரமான வேலை வாய்ப்பினை வழங்குகிறது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களின் ஆற்றலைக் கண்டு அவர்களுக்குப் பொருத்தமான பணிவாய்ப்பு பெறும் சூழலினை உருவாக்கித் தருகிறது.

கல்லூரியில் இயங்கும் அமைப்புகள்

  • அரிமா சங்கம், (Lions Club)
  • நாட்டு நலப் பணித் திட்டம், (NSS)
  • பாரதி முத்தமிழ் மன்றம்
  • எக்ஸ்னோரா, (Exnora)
  • இன்னர் வீல் கிளப் (Inner wheel club)
  • நுகர்வோர் நல அமைப்பு (City consumer club)
  • தன்னம்பிக்கை குழு (Motivational Club)
  • Redribbon club
  • Rotary
  • இளம் தொழில்முனைவோர் முகமை (ED cell)

போன்ற மாணவர்களின் பல்துறை ஆற்றல்களை வளர்ப்பதற்கான பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

உதவும் கரங்கள், சேவாலயா தொண்டு நிறுவனம், ஆதரவு மனநல மையம், அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட், சிவானந்தா குருகுலம் போன்ற பல்வேறு அமைப்புகளுக்குத் தொடர்ந்து மாணவர்களை அனுப்பிச் சேவையின் மூலமும் கல்வி அனுபவத்தைப் பெற இக்கல்லூரி வழி செய்கிறது.

கல்லூரியின் சிறப்பம்சங்கள் :

  • விசாலமான வகுப்பறைகள்,
  • தரம் மிக்க உலகளாவிய ஆய்வுக்கூடங்கள்,
  • அனுபவமும் தனித் திறமையும் கொண்ட பேராசிரியர்கள்,
  • இரு பாலருக்கான தனித்தனி விடுதி வசதிகள், பேருந்து வசதி, மற்றும் சிறந்த உணவக வசதியோடும் கல்லூரி மிகச் சிறப்பான கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டுப் போட்டிக் கனவுகளோடு வருகிற மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி விளையாட்டுத் துறையில் சாதிக்கின்ற வாய்ப்பினை இக்கல்லூரி உருவாக்கித் தருகிறது.
  • விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையைக் கல்லூரி வழங்குகிறது.
  • தரமான விருது பெற்ற திரைப்படங்களை மாணவர்கள் கண்டுகளிக்க ஃப்ரீ டிக்கெட் (Free ticket) வழியாகக் கல்லூரியில் அமைந்துள்ள திரையரங்கில் உலகத்தர திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இளங்கலைப் படிப்புகள் :

  1. B.Com General
  2. B.ComAccounting And Finance
  3. B.Com ComputerApplications
  4. B.Com Bankmanagement
  5. B.Com CorporateSecretaryship
  6. BCA
  7. BBA
  8. B.A English
  9. B.Sc ComputerScience
  10. B.Sc Visual Communication
  11. B.Sc Nutrition and Dietetics
  12. B.Sc CS-Artificial Intelligence
  13. B.Sc Psychology

முதுநிலை படிப்புகள் :

  1. M.Com General
  2. MBA
  3. M.Sc VisualCommunication

ஆகிய பட்டப் படிப்புகள் இக்கல்வி நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது.

கல்லூரி இணையதள முகவரி : https://www.sacas.ac.in


Tags:    

மேலும் செய்திகள்