டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆரணி காந்தி ரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-10 12:50 GMT

ஆரணி

ஆரணி காந்தி ரோட்டில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நீண்ட காலமாக பிரச்சினையாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகே நடந்தது.

தமிழ்நாடு மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.ராஜன் தலைமை தாங்கினார்.

டாஸ்மாக் கடையினால் போக்குவரத்து நெரிசலும் மற்றும் வழிப்பறி சம்பவங்கள், மதுபிரியர்கள் குடித்துவிட்டு அருகில் உள்ள கடையின் முன்பாகவே படுத்துக்கொண்டு வாந்தி எடுத்து பல்வேறு இன்னல்களையும், வியாபாரிகளுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கலெக்டர், உதவி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக ஆரணி உதவி கலெக்டர், தாசில்தாரை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அப்பகுதியில் உள்ள வியாபார சங்க பொறுப்பாளர்கள், வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்