கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மண்டல அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.